Sometime in May 2005, sitting beside the Silver Cascade waterfalls in Kodaikanal, this was one of the first poems that I'd tried to write in classical தமிழ்! With all due apologies to the stalwarts of the 'Language', I dedicate this one to the teachers in School who taught me தமிழ், which was once a 'subject' I hated the most!
அகிலி னங்கள் சூழ்ந்த மலையை
முகிலி னங்கள் மூடும் - வெட்பத்
திகிலி னங்கள் மறந்த உடல்கள்
துகிலி னங்கள் சூடும்!
கோடைக் காலம் ஆனால் என்ன
வாடைக் காற்றும் வீசும் - இந்த
நாடை அதனின் அழகைப் போற்றி
ஓடை ஒலிகள் பேசும்!
ஏரி அருவி அதனில் உள்ள
நீரின் துளிகள் பறக்கும் - இங்கு
நாரி இருக்கும் மலர்கள் கூட்டம்
ஊரி லெல்லாம் இருக்கும்!
கானல் என்னும் போதில் சொல்வர்
காணும் பொழுதில் மறையும் - கொடைக்
கானல் என்று சொல்லும் பொது
காணாமலும் இனிக்கும்!!
நினைவில் காணாமலும் இனிக்கும்!!!
The Introvert Condemnation
7 years ago
0 comments:
Post a Comment